மேலும் செய்திகள்
கலெக்டரிடம் மனு
27-Mar-2025
தேனி; தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் ஹிந்து எழுச்சி முன்னணி தேனி நகர் செயலாளர் அழகுபாண்டி தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். மனுவில், 'மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கடிக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. அமைப்பு மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
27-Mar-2025