உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊருணி ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஊருணி ஆக்கிரமிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி : நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர், அதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகலாபுரம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிட நல அலுவலர் சசிகலா, மாவட்ட வழங்கல் அலுவலர் மாசிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 281 மனுக்கள் வழங்கினர்.நாகலாபுரம் கிராம பொதுமக்கள் சார்பாக இளங்குமரன் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், ''கிராமத்தின் கிழக்கு பகுதியில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு அருகே ஊருணி 1ஏக்கர் 7 சென்டில் அமைந்துள்ளது. இந்த ஊருணியில் மழை நிரம்பும் போது கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் ஊருணியை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிக்க முயன்று வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் ஊருணியில் மண், சரளை கற்கள் கொட்டி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பிறபகுதிகளிலும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரினர்.ஜெயமங்கலம் வ.உ.சி., தெரு திருநாவுகரசு மனுவில், 'என்னுடைய தாத்தா, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிலத்திற்காக அரசு பணி தருவதாக கூறினர். ஆனால், பணி இதுவரை வழங்கவில்லை. இதற்காக 21 ஆண்டுகளாக 164 மனுக்கள் வழங்கி உள்ளேன். அரசுப்பணி வழங்க வேண்டும் அல்லது கொடுத்த இடத்திற்கு பதிலாக வேறு இடம் திருப்பி தர வேண்டும்'' என இருந்தது.ஆண்டிபட்டி தங்கம்மாள்புரம் மணிகண்டன், வீராச்சாமி தலைமையிலான பொதுமக்கள் வழங்கிய மனுவில், தங்கம்மாள்புரம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். வீட்டு வரி, மின்கட்டணம் செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க உத்தரவிட வேண்டும். என இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை