உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாந்தி உள்ளிட்ட அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். உப்புக்கோட்டை நாட்டாமை பவுன்ராஜ் தலைமையில் பல்வேறு சமூகத்தலைவர் கலெக்டர் அலுவலகம் முன் தனிநபர் குடும்பத்திற்காக கும்பாபிேஷக விழா நடத்தும் அறநிலையை துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மனிதநேய விடுதலைகட்சி நிர்வாகி ரமேஷ் குமார் மனுவில், 'மாவட்டத்தில் வீடு இல்லாத ஹிந்து அருந்ததியர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க,' கோரினர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருபவர்கள் சிலர் எரிபொருளுடன் வருவதும், சிலர் அதனை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சிப்பதும் அதிகரித்து வருகிறது. அவர்களை அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் காப்பாற்றுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்தப்படுகிறது. நுழைவாயில் அருகே தீயணைப்பு சிலிண்டருடன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை