உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடையில் பெட்ரோல் விற்றவர் கைது

கடையில் பெட்ரோல் விற்றவர் கைது

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே கோரையூத்தை சேர்ந்தவர் சிவபாண்டி 35, அப்பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். பலசரக்கு கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மயிலாடும்பாறை எஸ்.ஐ.,ராமசாமி மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல சரக்கு கடையில் எந்தவித பாதுகாப்பும் இன்றி விற்பனைக்காக 9 லிட்டர் பெட்ரோல் வைத்திருப்பது தெரிந்தது. பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் சிவபாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ