உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

 போட்டா ஜியோ ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பி,பதவி உயர்வு வழங்க வேண்டும், மேல்நிலை நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், காவலர்களுக்குகாலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குபேந்திர செல்வம் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிதிகாப்பாளர் சரவணமுத்து, அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் சென்னமராஜ், மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா,அரசு அலுவலர் ஒன்றிய மாநில துணைத்தலைவர் பிரபு. பல்வேறு சங்கங்களை சேர்ந்த நக்கீரன், ஆறுமுகச்சாமி, மஹபூப்பீவி, முத்துசெல்வம், விஜயன், ரவி, ரகுநாத் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை