உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சாகுபடியில் இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த திட்டம் சோதனை முறையில் துவக்கம்

 சாகுபடியில் இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த திட்டம் சோதனை முறையில் துவக்கம்

தேனி: மாவட்டத்தில் பயிர் சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்தும் நடைமுறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்றைய சூழலில் வேளாண் பணிகளுக்கு சில இடங்களில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தவிர்க்கவும், இயந்திரப் பயன்பாட்டை பரவலாக்கவும் வேளாண் பொறியியல் துறை சார்பில் புதிய திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி நிலம் உழுதல், விதைப்பு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், அறுவடை செய்தல் உள்ள அனைத்திற்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தில் தேனி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், வாழை, நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யபட உள்ளன. இதில் நெல் தவிர பிற அனைத்து பயிர்களும் சொட்டுநீர் பாசனத்தில் சாகுடி செய்யப்படும். சோதனை முறையில் ஜெயமங்கலம், உப்பார்பட்டியில் நெல், திம்மரசநாயக்கனுாரில் மக்காச்சோளம், ஆண்டிபட்டி பகுதியில் நிலக்கடலை, உப்பார்பட்டி, குப்பிநாயக்கன்பட்டியில் வாழை சாகுபடி துவங்கி உள்ளது. இந்த சோதனை முயற்சியில் கிடைக்கும் முடிவுகள் அடிப்படையில் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு நெல்லிற்கு ரூ. 27,600, மக்காச்சோளம் ரூ. 20,400, வாழை ரூ.45,800, நிலக்கடலை ரூ. 23,750, உளுந்து ரூ. 13,700 செலவு செய்ய நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என, வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை