மாவட்டத்தில் 6.14 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
தேனி: பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மாவட்டத்தில் அரசுத்துறைகள் சார்பில் 6.14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.மாநில அரசு சார்பில் பசுமை தமிழ்நாடு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இந்தாண்டு அரசுத்துறைகள் மூலம் 6.14 லட்சம் மரகன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இதற்காக துறை ரீதியாக எத்தனை என கலெக்டர் மூலம் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துறை ரீதியாக மரக்கன்றுகள் விபரம்
வனத்துறை 1.55லட்சம், ஊரக வளர்ச்சித்துைற 2.23 லட்சம், வேளாண்துறை 60 ஆயிரம், தோட்டக்கலை 60 ஆயிரம், நெடுஞ்சாலைத்துறை 25 ஆயிரம், பள்ளிகள் 22 ஆயிரம், கல்லுாரிகள் 30 ஆயிரம், ஹிந்துஅறநிலையத்துறை 10 ஆயிரம், வருவாய்த்துறை 10 ஆயிரம், நகராட்சிகள் 6 ஆயிரம், பேரூராட்சிகள் 22 ஆயிரம், சுகாதாரத்துறை 5 ஆயிரம், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலா 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட உத்தரவிடப்பட்டுள்ளது.