நவ.2ல் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
தேனி: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 14, 16 வயதிற்கு உட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்கள் தேர்வு நவ.2ல், தேனி கே.ஆர்.ஆர்., நகரில் நடக்க உள்ளது. தேனி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி கே.ஆர்.ஆர்., நகர் எம்.எம்.சி.எப்., மைதானத்தில் நவ.2 காலை 10:00 மணிக்கு 14 வயதிற்கு உட்பட்ட அணித்தேர்வும், மாலை 3:00 மணிக்கு 16 வயதிற்கு உட்பட்ட அணித்தேர்வும் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் உரிய வயது சான்றிதழ், கிரிக்கெட் சீருடை, காலணி அணிந்து குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும். இத்தேர்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு 98424 64196 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.