மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
3 minutes ago
நாளை (அக்.,6) கலந்தாய்வு
3 minutes ago
சனிப்பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
3 minutes ago
தேனி: தேனி கலெகடர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக நகரமைப்புத்துறையின் சார்பில், ஒற்றை சாளர முறையில் ஆன்லைனின் மனைப்பிரிவு, கட்டட அனுமதிக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் குறித்து ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்கள் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஊரக நகரமைப்புத்துறையின் உதவி இயக்குனர் காவியம் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் விஜயகண்ணன் முன்னிலை வகித்தார். வரைவாளர் மாரிச்சாமி, சர்வேயர் காமராஜ், ஒற்றை சாளர முறையில் ஆனலைனில் மனைப்பிரிவு, கட்டட அனுமதி பெற விண்ணப்பங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது முதல் அனுமதி வழங்குவது வரை உள்ள விபரங்களை காணொளி காட்சி மூலம் விளக்கினர். நிகழ்ச்சிக்கு பின், ஊராட்சிச் செயலர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஊராட்சிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார்.
3 minutes ago
3 minutes ago
3 minutes ago