உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பணி ஒன்றிய அளவில் நியமிக்க வேண்டும்

ஆண்டிபட்டி, : அரசு பொது தேர்வு 2023 -2024ம் ஆண்டிற்கான பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு பணியினை ஒன்றியம் வாரியாக இருப்பிட முகவரியிலிருந்து 10 கி.மீ., தூரத்திற்குள் நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் கல்வித்துறை மாநில, மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் பறக்கும் படை அலுவலர் நியமனத்தில் முன்னுரிமை பட்டியல் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக இருப்பிடம் முகவரியில் இருந்து 10 கி.மீ., தூரத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும்.கடந்த இரு ஆண்டுகளாக ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வில் 240 க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுக்கு மாணவர்களை நலன் கருதி கூடுதல் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும். பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2வில் 240க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் கணிதவியல் பாடத்திற்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்