உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ம.க., நிர்வாகிகள் நீக்கம்

பா.ம.க., நிர்வாகிகள் நீக்கம்

தேனி : தேனியில் தனியார் மஹாலில் பா.ம.க., வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அரசுபாண்டி தலைமை வகித்தார். மாநில செயலாளர் வடிவேல் ராவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்காத தேனி நகர நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து நீக்குதல், பெரியகுளம் வாகம்புளி பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், தேனி வாரசந்தை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆண்டிப்பட்டி விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல அமைப்பு செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை