மேலும் செய்திகள்
சிறுமி திருமணம் ஒருவர் மீது வழக்கு
14-Aug-2025
தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினர் கம்பம் அண்ணாபுரம் கே.கே.,பட்டி சுரேஷ் பாண்டி 23. இவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த சிறுமி திருமணம் குறித்து குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி இதுகுறித்து விசாரித்தார். பின் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சுரேஷ்பாண்டி மீது சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்வரி மற்றும் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
14-Aug-2025