உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மேற்கு வங்க வாலிபர் தற்கொலைபோடி: மேற்கு வங்காளம் லதாகிராம் சின்காரம் பகுதியை சேர்ந்தவர் அபுவார் ரவிதாஸ் 28. கட்டடத் தொழிலாளி. இவரை போடியை சேர்ந்த மகேந்திரன் கட்டட வேலைக்கு 8 நாட்கள் முன், போடிக்கு அழைத்து வந்தார். தனியாக வாடகைக்கு வீடு பிடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்தது. சந்தேகம் அடைந்த நிலையில் மகேந்திரன், சிலர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது. அபுவார் ரவிதாஸ் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். இவரது அலைபேசியை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, 'தான், தனி அறையில் இருப்பதாகவும், நேரம் சரி இல்லாததால் இறைவனிடம் செல்கிறேன்.' எனக்கூறி துாக்கிடுவதற்கு முன் அவரது அக்கா பாரிக்கு வாட்ஸ் அப் மூலம் பெங்காலி மொழியில் தகவலை அனுப்பிய விபரம் தெரிந்தது. போடி டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி காயம்கடமலைக்குண்டு: இப்பகுதியை சேர்ந்த கட்டுமான கூலித் தொழிலாளி சங்கர் 37. இவர் நேற்று முன் தினம் கடமலைக்குண்டை சேர்ந்த சுரேஷூடன் மயிலாடும்பாறை கருப்பசாமி கோயில் தெருவில் உள்ள முருகன் வீட்டில் கான்கிரீட் கம்பி கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கட்டடத்திற்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பிகள் உள்ளன. 10 அடி நீளம் உள்ள கம்பியை எடுத்த போது, எதிர்பாராத விதமாக கையில் இருந்த கம்பி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில், சங்கர் உடலில் மின்சாரம் பாய்ந்து கைகள், கால்கள் பாதிப்படைந்தது. உடனடியாக அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சங்கர் மனைவி தேவி 35, புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.இருதரப்பு மோதல்8 பேர் மீது வழக்குதேனி: கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள காலியிடம் தொடர்பாக வருஷநாடு தர்மராஜபுரம் வனராஜ் 60, அதே பகுதியை சேர்ந்த அறிவழகனுக்கு பிரச்னை உள்ளது. இதில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வனராஜ் புகாரில் அறிவழகன், பால்பாண்டி, ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி இளங்கோவன், கருவேல்நாயக்கன்பட்டி முருகன், செல்லப்பாண்டி மீதும், அறிவழகன் மனைவி பாண்டீஸ்வரி புகாரில் வனராஜ், இவரது மனைவி தமிழ்செல்வி, மகன் சுரேஸ் மீது புகார் அளித்தார். மோதலில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் மாயம்தேனி: தேனி பாரஸ்ட் ரோடு 2வது தெரு மருதுபாண்டி, இவரது மனைவி நாகலட்சுமி. வீட்டில் தையல் வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்த நாகலட்சுமி திடீரென மாயமானார். மருதுபாண்டி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: சீலையம்பட்டி மேலப்பூலானந்தபுரம் முத்துக்குமார் 33. சின்னமனுாரில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். கடை முன் இவரது டூவீலரை நிறுத்தி விட்டு வியாபாரத்தை கவனித்து வந்தார். மதியம் வீட்டிற்கு புறப்படும் போது டூவீலர் காணாமல் போயிருந்தது. தெரிந்த இடங்களில் தேடி பார்த்த போதும் டூவீலரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவரது புகாரில் சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை