உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கார் டூவீலர் விபத்து: இருவர் காயம்தேனி: உத்தமபாளையம் கோம்பை அரண்மனை தெரு ராம்குமார் 42. சென்னை தனியார் நிறுவன மேலாளர். தீபாவளி கொண்டாட மனைவியின் ஊரான புதுக்கோட்டைக்கு காரில் குடும்பத்துடன் சென்றனர். மீண்டும் தேனி திரும்ப நவ.3ல் தேவதானப்பட்டி தெற்குத் தெரு பைபாஸ் ரோடு பிரிவில் பொம்மிநாயக்கன்பட்டி அருகே வந்தனர். அப்போது புல்லாக்காபட்டி காளியம்மன்கோயில் தெரு ஆகாஷ் ஓட்டி வந்த டூவீலர், காரை வலதுபுறம் முந்திச் செல்ல முயன்றபோது, காரில் மோதி விபத்து நடந்தது. இதில் ஆகாஷ், டூவீலரில் வந்த சிவகுரு ஆகிய இருவருக்கு தலை, கால், கைகளில் காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்த ராம்குமார், தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மின்மோட்டார் ஒயர் திருட்டுதேனி: திருமலாபுரம் லால்பாபாஜி நகர் சந்திரன் 43. இவர் அரப்படித்தேவன்பட்டியில் உள்ள செல்வராஜின் பண்ணைத் தோட்டத்தில் 10 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இவரும் கடந்த 4 ஆண்டுகளாக சின்னச்சாமி பணிபுரிகிறார். இருவரும் அக்.29ல் காலை 7:00 மணிக்கு மோட்டார் அறையில் மோட்டார் ஸ்சுவிட்ச் ஆன் செய்தும் ஆக வில்லை. சந்திரன் மோட்டார் அறையை விட்டு வெளியே வந்து கிணற்றில் பார்த்த போது ரூ.72,200 மதிப்புள்ள 190 மீ., நீளமுள்ள ஒயர் திருடு போனது தெரிந்தது. க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் காவலாளி பலிதேனி: பெரியகுளம் எ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா நகர் தோப்பு காவலாளி பெரியசாமி 54. அக்.30 இரவில் டூவீலரில் தோப்புக் காவலுக்கு பணிக்கு கும்பக்கரை மெயின் ரோட்டில் கட்டப்பாலம் அருகே சென்றார். டீக்கடை அருகே நாய் குருக்கே வந்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெரியசாமி பலத்த காயம் ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.பெரியகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.பணம் பறிப்பு: இருவர் கைதுதேனி: கடமலைக்குண்டு மேலப்பட்டி கிருஷ்ணன் 50. இவர் அப்பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கச் சென்றார். அவரை கடமலைக்குண்டு அம்பேத்கர் தெரு சதீஷ், கருப்பசாமி, காமாட்சி ஆகிய மூவர் பட்டாக் கத்திகளை காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டு, ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். முன்னதாக கடைக்கும் முன் இருந்த வியாபாரிகளை பட்டா கத்திகளை காண்பித்து மிரட்டினர். பாதிக்கப்பட்டவர் புகாரில், மூவர் மீது வழக்குப்பதிந்த கடமலைக்குண்டு போலீசார் சதீஷ் 23, காமாட்சி 19 ஆகிய இருவரை கைது செய்து, கருப்பசாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை