உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள் தேனி

போலீஸ் செய்திகள் தேனி

மரத்தில் மோதி தொழிலாளி பலிதேனி: கோட்டூர் ஆர்.சி., தெரு டேவிட் 35, கட்டுமான தொழிலாளி. தர்மாபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்று தர்மாபுரி கரட்டு பாதை வழியாக வீடு திரும்பினார். அப்போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது, நிலை தடுமாறி டூவீலரை மரத்தில் மோதினார். இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே டேவிட் இறந்தார். இவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரது மனைவி பிரின்ஷியா புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் திருட்டுதேனி: பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் அழகுமுத்து. பணி தொடர்பாக நியூசிலாந்து சென்று உள்ளார். இவரது வீட்டை உறவினர் தேனி கண்ணாத்தாள் கோயில் தெரு சுதாகரன் பராமரித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு அழகுமுத்து வீட்டில் திருட்டு நடந்தது. திருட்டு குறித்து சுதாகரன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை