உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

15 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குதேனி: அரண்மனைப்புதுார் எடிசன் தெரு காளியம்மாள். இவரது பேரன் துஷ்யந்த். துஷ்யந்த் அவரது நண்பர்கள் தெருவில் டூவலரில் செல்லும் போது மற்றவர்களை அச்சுருத்துவது போன்று சென்றுள்ளார். மேலும் பாட்டில் வீட்டில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் துஷ்யந்த் அவரது நண்பர்களை கண்டித்து சென்றனர். போலீசார் சென்ற பின் தெருவில் உள்ளவர்களுக்கு துஷ்யந்த் அவரது நண்பர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். அப்பகுதியினர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் காயம்தேனி: அனுமந்தம்பட்டி கிழக்குதெரு மணிகண்டன் ஆட்டோ டிரைவர். வீரபாண்டி அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கு பின் ஜெயமங்கலம் சிந்துவம்பட்டி ரமேஷ் ஓட்டி வந்த தனியார் பஸ், ஆட்டோ மீது மோதியது. விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து மணிகண்டன் காயமடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஓய்வு பெற்ற எஸ்.ஐ., காயம்தேனி: பழனிசெட்டிபட்டி ஓம் விநாயகா நகர் முருகேசன் 60, போலீஸ் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அப்பகுதியில் டூவீலரில் சென்ற போது அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை