உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்... 

போலீஸ் செய்திகள்... 

முதியவர் தற்கொலைதேனி: கோடாங்கிபட்டி சுப்பிரமணியர் கோயில் தெரு நாகராஜ் 67. ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்தவர், தனது மகன் முருகனிடம் அதிருப்தியாக பேசி உள்ளார். வீட்டில் ஆட்கள் இல்லாதநேரத்தில் விஷ மாத்திரை குடித்து மயங்கினார். முருகன், தந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார்.சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார்.அலைபேசி வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலைதேனி: பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு ராமராஜ் 51. கான்கிரீட் கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ்வரன் 18. இவர் கண்ணாடி கடையில் வேலை செய்தார். மகன், புதிய அலைபேசி வாங்குவதற்காக தாயிடம் ரூ.50 ஆயிரம் கேட்டார். இதனை தாய், கணவர் ராமராஜிடம் தெரிவித்தார். கணவர் திட்டியதால், மனைவி கோபித்து கொண்டு வெளியே சென்றார். தந்தை மகனுக்கு உணவு வாங்க கடைக்கு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த மகன் விக்னேஷ்வரன் 18, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.த.ம.மு.க., ஒன்றிய செயலாளர் மீது வழக்குதேனி: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் போடி ஒன்றியச் செயலாளர் அஜித் 29. இவர் இவரின் ஆதரவாளர்கள் சிலர் இணைந்து கோடாங்கிபட்டியில் கட்சி நிர்வாகி தீபக்பாண்டியன் நினைவு தினத்தை கொண்டாடினர். இதில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறாக அரசு அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். அப்பகுதியில் ரோந்து சென்ற பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் போடி ஒன்றிய செயலாளர் அஜித், அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.டூவீலர் திருடிய மூன்று சிறுவர்கள் கைதுதேனி: அல்லிநகரம் தெற்குப்புதுத்தெரு பால்பண்ணை உரிமையாளர் ராஜா. பண்ணையில் பால் கறவையாளராக பணிபுரியும் கணேசனிடம் 2025 மே 9ல் தனது டூவீலரை ராஜா வழங்கினார். கணேசன் டூவீலரை எடுத்துச் சென்று வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது டூவீலரை காணவில்லை. அப்பகுதியில் உள்ள கபிலேஷ் என்ற நபரிடம் திருடு போன டூவீலர் குறித்து தகவல் கூறியபோது, அருகில் நின்றிருந்த போடி பகுதியை சேர்ந்த 17 வயது இளஞ்சிறார், 16 வயது இளஞ்சிறார், 15 வயது சிறுவன் ஆகிய மூவரும் தப்பி ஓடினர். அருகில்இருந்தவர்கள் உதவியுடன் மூன்று சிறார்களை, அல்லிநகரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் டூவீலரை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். மூவரையும் அல்லிநகரம் எஸ்.ஐ., கண்ணன் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி