உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

கூலித்தொழிலாளி மாயம்தேனி: கோடாங்கிபட்டி போடேந்திரபுரம் ரோடு கல்யாணி 57. இவரது மூத்த மகன் கமலக்கண்ணன் 32. பிளஸ் 2 முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தனது தம்பி வினோத் கண்ணன், வீட்டிற்கு வந்த நிலையில், கடந்த ஜூன் 4ல் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. பெற்றோர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.லாரி மோதி வாலிபர் காயம்தேனி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ராஜக்காபட்டி கிழக்குத் தெரு மண் அள்ளும் இயந்திர வாகன டிரைவர் ஈஸ்வரன் 27. கடமலைக்குண்டில் உள்ள சித்திஊரில் திருவிழாவுக்கு சென்றார். பின் அல்லிநகரம் ஒண்டிவீரன்நகரில் உள்ள தனது பெரியப்பா மகன் லோகமணியை பார்ப்பதற்கு ஜூன் 8ல் டூவீலரில் வந்தார். பெரியகுளம் ரோடு கண் மருத்துவமனை அருகே வலதுபுறமாக திரும்பி ஒண்டிவீரன் நகரில் சென்றார். போடி மேலத்தெரு டிரைவர் பாலமுரளி 40, ஓட்டி வந்த லாரி டூவீலர் மீது மோதியது. பலத்த காயமடைந்த ஈஸ்வரன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தீவீர சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி