உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

காரில் கஞ்சா கடத்தியவர் கைது 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் மூணாறு: இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே பத்தாம் மைல் பகுதியில் எக்சைஸ் இன்ஸ்பெக்டர் ராகுல்சசி தலைமையில் வாகன பரிசோதனை நடந்தது. அப்போது அந்த வழியில் வந்த காரை சோதனையிட்டனர். அதில் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே எரமல்லூர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் 52, என்பவர் 6.590 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. கார், கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அப்பாஸை கைது செய்தனர். மூணாறு, அடிமாலி இடையே இயக்கப்படும் தனியார் பஸ்சில் அப்பாஸ் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். இவர், ஒடிசாவுக்கு நேரில் சென்று கஞ்சா வாங்கி, அதனை விற்பனைக்கு அடிமாலிக்கு கொண்டு வரும் வழியில் எக்சைஸ் போலீசாரிடம் சிக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மூதாட்டி தற்கொலை போடி: கரியப்பகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் கனகமணி 70. இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் கால் பாதத்தில் புண் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல மாதங்கள் ஆகியும் புண் ஆறாததால், வலி தாங்க முடியாமல் இருந்தார். இதனால் மனம் உடைந்த கனகமணி, நேற்று முன்தினம் வீட்டில் ஆட்கள் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகன் ராமராஜ் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். ஜவுளி வியாபாரி தற்கொலை தேனி: பழனிசெட்டிபட்டி முத்துநகர் ஜவுளி வியாபாரி சிவபாலன் 45. தொழில் நலிவடைந்ததால் கடன், குடிபழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி யமுனா புகாரில் பழனிசெட்டி போலீசார் விசாரிக்கின்றனர். டூவீலர் திருட்டு தேனி: ஆலைமலையான்பட்டி முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ். கொடுவிலார்பட்டியில் உள்ள டீக்கடை அருகே பழுதடைந்த அவரது டூவீலரை நிறுத்தி சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை. ஜெயபிரகாஷ் புகாரில் போலீசார் வழக்குப்பதிந்து டூவீலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை