போலீஸ் செய்திகள்
பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு தேனி: அரண்மனைப்புதுார் முல்லைநகர் பெத்தனாட்சி 52. இவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பையாவிடம் கடனாக ரூ. 2.50 லட்சம் வழங்கி இருந்தார். பணத்தை கேட்டு அவரது வீட்டிற்கு பெத்தனாட்சி சென்றார். அங்கிருந்த கருப்பையாவின் மகன் வெற்றிக்குமார், அவரது மனைவி இணைந்து தாக்கினர். பெத்தானட்சி புகாரில் வெற்றிக்குமார், அவரது மனைவி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் காயம் தேனி: அரப்படிதேவன்பட்டி சேதுராமன் 31, ஆட்டோ டிரைவர். இவர் அப்படித்தேவன்பட்டி கணேசன் 55, ராஜகிருஷ்ணன் 55, சின்னமனுார் வசந்த் 25, அல்லிநகரம் மணி 48, குருவம்மாள் 55, கோபி 36 ஆகியோரை தேனியில் இருந்து க.விலக்கிற்கு நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் அழைத்து சென்றார். ஆட்டோ குன்னுார் பாலத்திற்கு அருகே சென்ற போது, சின்னமனுார் குட்டியப்பதேவர் தெரு பரமகுரு ஓட்டிவந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ரோட்டோரத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. அருகில் இருந்த மரத்தில் கார் மோதி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சேதுராமன், பரமகுரு உட்பட 8 பேரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர். சேதுராமன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். புகையிலை பதுக்கிய இருவர் கைது தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., ராஜசேகர் தலைமையிலான போலீசார் கோட்டூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கோட்டூர் சி.எஸ்.ஐ., சர்ச் தெருவில் உள்ள ரெஜின்குமார் என்பவரது கடையில் சோதனை செய்தனர். வியாபாரத்திற்காக பதுக்கி வைக்கட்டிருந்த ரூ. 39,816 மதிப்பிலான 1700 புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ. 25ஆயிரத்தை கைப்பற்றினர். புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ரெஜின்குமார் 46, அவரது மகன் தீபக்குமார் 21 ஆகியோரை கைது செய்தனர். இடையூறு செய்த 33 பேர் மீது வழக்கு தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் இருந்து ஊர்வலமாக வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தி நேதாஜி பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பிரபு உள்ளிட்ட 33 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.