உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

டூவீலர் விபத்தில் சிறுவன் பலி தேனி: கன்னிசேர்வைபட்டி மாரியம்மன் கோயில் தெரு ராம்நாத் 16. இவரது தாயார் சூர்யா 35. ராம்நாத் அக்.20ல் தீபாவளி அன்று தாயிடம் கடைக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு, தாத்தாவின் டூவீலரை எடுத்துச் சென்றார். சின்னமனுார் ஹைவேவிஸ் மெயின் ரோடு சிவபுரம் பெட்ரோல் பங்க் பிரிவில் மீடியனில்மோதி கீழே விழுந்து தலையில் காயமடைந்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் ராம்நாத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் இறந்த நிலையில் மீ்ட்பு தேனி: கொடுவிலார்பட்டி அம்மன் கோயில் தெரு தமிழ்வாணன் 22. இவர் சின்னமனுார் டயர் கம்பெனியில் சர்வீஸ்மேனாக பணிபுரிகிறார். இவருக்கும் இவரதுமனைவி சரண்யாவுக்கும் 20, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ளார். தமிழ்வாணன் அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்தது.மனைவியும், தாயும் கூறிய பின்பும், தீபாவளி அன்று அதிக மதுகுடித்து வீட்டில் இருந்தார். வெளியில் சென்றுவருவதாக கூறியவர் வீடு திரும்ப வில்லை.காலையில் கொடுவிலார்பட்டி புதுக்குளம் அருகில் உள்ள காலியிடத்தில் இறந்து கிடந்தார். உடலை மீட்டு பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பங்க் ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் தேனி: அரண்மனைப்புதுார் ஐஸ்வர்யா நகர் பாண்டி 58. அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். தீபாவளி அன்று பாண்டி வாடிக்கையாளர்ஒருவரின் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் பள்ளப்பட்டி சத்தியநாதபுரம் தினேஸ்வரன் 21, அங்கு வந்து, அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். பாதுகாப்பு கருதி பாண்டி, கொஞ்ச துாரம் தள்ளிச்சென்று அலைபேசயில் பேசுங்கள் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்வரன்,பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, அலைபேசி, தீயணைக்க வைத்திருந்த இரும்பு வாளியால் தாக்கினார்.இதில் பாண்டி தலையில் காயமடைந்தார். இதனை தடுக்க வந்த சக ஊழியர் சரவணனையும் வாளியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். பாண்டி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் தினேஸ்வரன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தினேஷ்வரன் மீது பழனிசெட்டிபட்டியில் 7 வழக்குகளும், கண்டமனுாரில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டாசு வெடித்த மூவர் கைது பெரியகுளம்: தென்கரை இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தூர்பாண்டி 27. இவரது நண்பர்கள் அஜித்குமார் 27. தாமோதரன் 23. செல்வபாரதி 26. ஆகியோர் மதுபோதையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி, ரோட்டில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தனர். போலீசார் எச்சரித்தும் கேட்கவில்லை. தென்கரை எஸ்.ஐ., இத்திரிஸ்கான் அஜித்குமார், தாமோதரன், செல்வபாரதியை கைது செய்தார். மகனை பார்க்க விடாததால் தந்தை தற்கொலை மூணாறு: கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சிவன்மலை எஸ்டேட் அப்பர் டிவிஷனைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 30. இவருக்கு மனைவி, ஐந்து வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஐந்து மாதங்களுக்கு முன்பு சந்தோஷ்குமாரை விட்டு, அவரது மனைவி, மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கொச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் தீபாவளி விடுமுறையில் மூணாறுக்கு வந்தார். தீபாவளி பண்டிகைக்கு மகனை பார்க்க வேண்டும் என எண்ணினார். அதற்கு மனைவியின் உறவினர்கள் மறுத்து விட்டதால், மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர். கத்தியால் வெட்டி தப்பி ஓட்டம் தேவதானப்பட்டி: - பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் காளிதாஸ் 29. இவரது மாமா ராமர் 39. இருவரும் ஏ.வாடிப்பட்டி பிரிவு அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஜெயமங்கலத்தைச் சேர்ந்த கபிலன்,வேலு, ராஜபாண்டி, சுரேஷ் பாண்டி, முத்து, நிஷாந்த், ரோஹித், கவுதம்,சாந்தகுமார், தீனதயாளன் உட்பட 13 பேர் 6 டூவீலரில் அவதூறாக பேசிக்கொண்டு வந்தனர். ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள் என கேட்ட ராமரை, சிலர் கத்தியால் தலையில் வெட்டி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ