போலீஸ் செய்தி
விநாயகர் சிலை திருட்டு தேனி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் மல்லையா ஈஸ்வரன் கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோயிலை அதே பகுதி வடக்குத்தெரு செல்வரெங்கன்70, பராமரித்து வருகிறார். டிச.28ல் கோயிலில் இருந்த 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலை காணவில்லை. இதன் விபரங்களைகோயில் நிர்வாகக் குழுவில் தெரிவித்தார். செல்வரெங்கன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விரலை வெட்டியவர் உட்பட 6 பேர் மீது வழக்கு தேனி: தப்புக்குண்டு ஆலமரத் தெரு ராஜேஷ் 30. அதேப் பகுதி அண்ணாநகர் ஜோதிராஜ். இவருக்கும், ராஜேஷின் சித்தப்பாவிற்கு பணம் கொடுக்கல்வாங்கலில் பிரச்னை இருந்தது. ராஜேஷூம், அவரது சித்தப்பாவும் பலமுறை ஜோதிராஷிடம் பணத்தைத் திருப்பித்தர கேட்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிராஜ் மற்றும் 5 பேர், தேனி ஓடைப்பட்டி ரோட்டில் உள்ள டீக்கடை முன் நின்றிருந்த ராஜேஷ், அவரதுசித்தப்பாவை தாக்கினர். ஜோதிராஜ், ராஜேஷை கத்தியால் வலது ஆள்காட்டி விரலை வெட்டிவிட்டு தப்பினார். ராஜேஷ் புகாரில் வீரபாண்டி போலீசார்ஜோதிராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். போதையில் கீழே விழுந்தவர் பலி தேனி: சின்னமனுார் செக்காமுக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி 45. மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்தார்.சின்னமனுார் டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு அவ்வழியாக நடந்து சென்றார். அப்போது தானாக தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் டிச.27ல் உயிரிழந்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர். மனநலம் பாதித்தபெண் மாயம் தேனி: தேவாரம் டி.அழகர்நாயக்கன்பட்டி கிழக்குத் தெரு சுருளிமணி 49. இவரது மனைவி முத்துலட்சுமி 38. பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். டிச.26ல் தனது மாமியாரிடம் விறகு எடுத்து வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. தேவாரம் போலீசார் விசாரிக்கின்றனர். லாரி மீது ஆட்டோ மோதி சத்துணவு அமைப்பாளர் காயம் தேனி: தேனிராஜா லைன் பாண்டியன் ஆயில் மில் தெரு சரவணன் 39. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அருள்செல்வி 38. இவர் காட்டுநாயக்கன்பட்டி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர் டிச.27ல் கோடாங்கிபட்டி முருகேசன் 31, ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பணிக்குச் சென்றார். அப்போது நேருசிலை பெரியகுளம் ரோடு வழியாக சென்ற ஆட்டோ அங்கு நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் மோதி விபத்து நடந்தது. இதில் சத்துணவு அமைப்பாளர் காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தேனி எஸ்.ஐ., தேவராஜ், சரவணன் புகாரில் முருகேசன் மீது வழக்குப்பதிந்துவிசாரிக்கிறார். அரிவாள் வெட்டு: ஒருவர் கைது போடி: மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு 62. இவரது தந்தை ராமரிடம் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் அழகுராஜா 40, பணம் கேட்டுபிரச்னை செய்துள்ளார். இதனை பாலு கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த அழகுராஜா, பாலுவை தாக்கி அரிவாளால் வலது பக்க தலையில் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாலு புகாரில் போடி தாலுகா போலீசார் அழகு ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.