உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தற்கொலைக்கு முயற்சிப்போர் மீது வி.ஏ.ஓ.,புகார் அளிக்க வேண்டும் போலீசார் வலியுறுத்தல்

தற்கொலைக்கு முயற்சிப்போர் மீது வி.ஏ.ஓ.,புகார் அளிக்க வேண்டும் போலீசார் வலியுறுத்தல்

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் தற்கொலை முயற்சி செய்பவர்கள் மீது புகார் தெரிவிக்க வி.ஏ.ஓ., அல்லது வருவாய்த்துறையினர் முன் வர வேண்டும் என போலீசார் கோரியுள்ளனர். திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனு அளிக்க பொதுமக்கள் வருகின்றனர். சிலர் மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயல்கின்றனர். இவ்வாறு தற்கொலை முயற்சி செய்பவர்கள் மீது பிற மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நாட்களில் மனு அளிக்க வரும் சிலர் தற்கொலை முயற்சி செய்வது அதிகரித்து வருகிறது. இவர்களின் தற்கொலை முயற்சியை தடுத்து போலீசார் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி போலீசார் சிலர் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோர் மீது வி.ஏ.ஓ., புகார் அளித்தால் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். ஆனால் மக்கள் குறைதீர் கூட்ட நாட்களில் வி.ஏ.ஓ.,க்கள் தற்போது வருவது இல்லை. இதனால் புகார் இல்லாததால் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டு கொள்ளாமல் விடுவிக்கப்படுகின்றனர். எனவே, குறைதீர் கூட்டம் நடக்கும் நாட்களில் வி.ஏ.ஓ.,க்கள் வருவதற்கு வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை