உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி

பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் அறுவடை பின்சார் தொழில்நுட்பத்தின்முக்கியத்துவம் குறித்து பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, தேனி வேளாண், தோட்டக்கலைத்துறை இணைந்து மாநில அளவிலான தோட்டக்கலை பயிர்களில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் பயிற்சி தோட்டக்கலை கல்லூரியில் இரு தினங்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.பழ அறிவியல் துறை இணைப் பேராசிரியர் முத்துராமலிங்கம், வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி முன்னிலை வகித்தனர். அறுவடை பின்சார் தொழில்நுட்பம் குறித்து பேராசிரியர் ஆபியூலா பேசுகையில்: பழங்களை கழுவுதல், தரம் பிரித்தல், பெட்டியில் அடைத்தல் சேமிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார். திருச்சி மணிகண்டத்திலிருந்து 43 விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இவர்கள் சின்னமனூர் வாழை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயிற்சி முடிவில் உயிர் வேதியியல் உதவி பேராசிரியர் அனிதா நன்றி கூறினார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ