உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில்களில் பவுர்ணமி பூஜை

கோயில்களில் பவுர்ணமி பூஜை

தேனி: மாவட்டத்தில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.தேனி என்.ஆர்.டி.,நகர் சிவகணேச கந்த பெருமாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்பர் பராமரிப்பு குழு நிர்வாகிகள் ஜெபிரதீப், நாராயணன், சிவகுமார், விஜயராணி, வசந்த், சிவனடியார் பிரபு உள்ளிட்டோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதன்முறையாக பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையில் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் செயல் அலுவலர் நாராயணி தலைமையில் விளக்கு பூஜை ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்திருந்தனர். மாதந்தோறும் பவுர்ணமி நாளில் விளக்கு பூஜை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி