தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்..
தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில்,' அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள், அமைச்சுப்பணியாளர்கள் நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், தினகரன், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.