உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பதவி உயர்வு வழங்க சிறைத்துறை ஏட்டுக்கள் கோரிக்கை

பதவி உயர்வு வழங்க சிறைத்துறை ஏட்டுக்கள் கோரிக்கை

கம்பம்:''25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு போலீஸ், தீயணைப்புத்துறைகள் போல சிறப்பு உதவி சிறை அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை சட்ட அமைச்சர் ஏப்.,4ல் சட்டசபை மானிய விவாதத்தின் போது அறிவிக்க வேண்டும்,'' என, சிறைகளில் பணிபுரியும் ஏட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் போலீசார், தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகிய 3 சீருடை பணி துறைகள் உள்ளன. இதில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஏட்டுக்களுக்கு போலீஸ் துறையில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வும், தீயணைப்புத்துறையில் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. சிறைகளில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஏட்டுகள் பதவி உயர்வு இல்லாமல் அதே நிலையிலேயே உள்ளனர்.ஒரே மாதிரியான கல்வித் தகுதி, அடிப்படை பயிற்சி, சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், பதவி உயர்வு வழங்குவதில் மட்டும்' சிறைத்துறை பின்தங்குகிறது. பதவி உயர்வு கொடுக்க தயக்கம் காட்டப்படுகிறது. ஏப்.,4ல் சட்டசபையில் சட்ட அமைச்சர் ரகுபதி மானிய கோரிக்கையில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என சிறைத் துறை ஏட்டுக்கள் கோரியுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: தமிழக சிறைகளில் காலியாக உள்ள 242 உதவி சிறை அலுவலர் பணியிடங்களில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிறைக்காவலர்களுக்கு மாவட்ட அளவில் மாறுதல் வழங்க வேண்டும். மத்திய சிறையில் பணிபுரியும் சிறை காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கவும், சிறைக்காவலர்களுக்கு என ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் புதிய பணியிடம் தோற்றுவிக்கவும், மாவட்டங்களில் உள்ள கிளை சிறைகளை தரம் உயர்த்தவும், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பெண் சிறை காவலர்களுக்கு சிறப்பு சீருடை வழங்கவும் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை