உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குமுளி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல தயக்கம் காட்டும் தனியார் பஸ்கள் -ஒரு வழிப்பாதை தாமதத்தால் தொடரும் நெரிசல்

 குமுளி பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல தயக்கம் காட்டும் தனியார் பஸ்கள் -ஒரு வழிப்பாதை தாமதத்தால் தொடரும் நெரிசல்

கூடலுார்: குமுளியில் திறக்கப்பட்ட புது பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் நெரிசலை ஏற்படுத்தும் வகையில் தனியார் பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகிறது. ஒரு வழிப்பாதை அமல்படுத்தாததால் நெரிசலும் தொடர்கிறது. குமுளி பஸ் ஸ்டாண்டில் வசதி இன்றி பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. சபரிமலை மண்டல காலத்தில் பல மணி நேரம் நெரிசல் சிக்கி அவதிக்குள்ளாவது தொடர்ந்தது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு குமுளியில் பஸ் ஸ்டாண்ட் டிச.18ல் திறப்பு விழா காணப்பட்டது. அரசு பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்டை பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் தனியார் பஸ்கள் மட்டும் வழக்கமாக ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. மேலும் மாலையில் சென்னை, கோவை உள்ளிட்ட தொலை துாரத்திற்கு செல்லும் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் மேலும் நெரிசலை அதிகப்படுத்தி உள்ளது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால் ஒருவழிப் பாதையாக விரைவில் அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் இதுவரை ஒருவழிப் பாதைக்கும் நடவடிக்கை இல்லை. லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப் பாதையில் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப் படுவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு மேற்கொண்டு ஒருவழிப்பாதை அமல்படுத்தவும், அனைத்து பஸ்களும் குமுளி பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்திச் செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி