உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் தனியார் துறைகள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த முகாமில் தேனி கலெக்டர் ஷஜீவனா, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலை வாய்ப்பு வேண்டி மாற்றுத்திறனாளிகள் 8 பேர் உட்பட 1045 பேர் பதிவு செய்தனர். அவர்களில் மாற்றுத்திறனாளிகள் இருவர் உள்பட 323 பேருக்கு தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2ம் கட்ட கலந்தாய்விற்கு 168 பேரும், திறன் பயிற்சி பெறுவதற்கு 72 பேரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை