உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிதி ஒதுக்கீடு செய்யாததால் துணை மின்நிலையங்களுக்கு சிக்கல்

நிதி ஒதுக்கீடு செய்யாததால் துணை மின்நிலையங்களுக்கு சிக்கல்

கம்பம்: சின்னமனூர், காமயகவுண்டன்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யாததால், துணை மின் நிலையங்கள் அமைக்க முடியாத சூழல் நிநிலை எழுந்துள்ளதாக தெரிகிறது. சரியான அழுத்தத்தில்,இடையூறு இல்லாத மின் சப்ளை, புதிய இணைப்புகள் வழங்குதல் போன்றவற்றிற்காக துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக வழித்தட மின் இழப்பை குறைக்கவும் பயன்படும். எனவே துணை மின்நிலையங்கள் தேவைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் வண்ணாத்திபாறை, கம்பம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, தேவாரம், ராசிங்காபுரம், சின்ன ஒவுலாபுரம், காமாட்சிபுரம், தேனி, மதுராபுரி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 20 க்கும் - மேற்பட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.இதில் சின்னமனூரில் நீண்ட காலமாக துணை மின்நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்கு மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணிகள் துவங்கியது. வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் ஒன்றை தேர்வு செய்தார்கள். இடத்தை தேர்வு செய்தும் பணி துவங்கவில்லை. இதேபோல காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கி பல ஆண்டுகளை கடந்து விட்டது. இடமும் தேர்வாகி உள்ளது. ஆனால் இரண்டு ஊர்களிலும் துணை மின் நிலையங்கள் அமைக்க மின்வாரியம் நிதி ஒதுக்கீடு செய்யாததால், துணை மின் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கனவாகவே உள்ளது.சின்னமனூர், காமயகவுண்டன்பட்டியில் துணை மின்நிலையங்கள் அமைக்க வாரியம் உரிய நிதி ஒதுக்கீடுகளை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ