உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராஜவாய்க்காலில் ரூ.24.50 கோடி மதிப்பில் சிமென்ட் தளம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

ராஜவாய்க்காலில் ரூ.24.50 கோடி மதிப்பில் சிமென்ட் தளம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

தேனி: ''தேனி ராஜவாய்க்காலில் 'சிமென்ட்' தளம் அமைக்க ரூ.24.50 கோடி மதிப்பிற்கு கருத்துரு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.'' என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனி நகர் பகுதியில் கொட்டக்குடி ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், சோலைமலை அய்யனார் கோவில் தெரு, அரண்மனைப்புதுார் விலக்கு வழியாக சுமார் 2.47 கி.மீ., துாரத்திற்கு ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இதில் ராஜவாய்க்காலில் செல்லும் நீர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ராஜாகுளத்திற்கு செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவில் அகற்றப்பட்டன. தற்போது பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு ரூ.2.26 கோடியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. நகராட்சி சார்பில் மேலும் 5 இடங்களில் தெருக்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மற்ற பகுதிகளில் வேலி போன்ற அமைப்பு ஏற்படுத்த உள்ளனர்.

கருத்துரு அனுப்பி வைப்பு

அதே சமயம் நீர்வளத்துறை சார்பில் ராஜவாய்க்காலில் சிமென்ட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாய்க்கால் இரு கரைகள், நீர் செல்லும் தடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.24.50 கோடி மதிப்பில் கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனை அரசுக்கு அனுப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ