உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோர கடைகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்டோர் கைது

ரோட்டோர கடைகள் அகற்றத்திற்கு எதிர்ப்பு: மறியலில் ஈடுபட்டோர் கைது

மூணாறு,: மூணாறில் ரோட்டோரக் கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு, மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் பதட்டமான சூழல் நிலவியதுமூணாறில் ரோட்டோரக் கடைகளை அகற்ற வேண்டும் என செப்.9ல் எம்.எல்.ஏ.ராஜா தலைமையில் நடந்த போக்குவரத்து ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். மூணாறு ஊராட்சி செயலர் உதயகுமார் தலைமையில் பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணை முதல் ரோட்டோரக் கடைகளை அகற்றும் பணியை ஊழியர்கள் நேற்று காலை துவக்கினர்.அதனை அறிந்து சம்பவ இடத்தில் ரோட்டோர கடைகாரர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் களம் இறங்கியதால் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ் பேபி, இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.பரபரப்பு: இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் ஆளும் கட்சியினர் இரட்டை வேஷம் போடுவதாக கூறி எம்.எல்.ஏ.க்கு எதிராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஊராட்சி தலைவருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் காங்கிரஸ் ஒன்றிய தலைவர் விஜயகுமார், மண்டல தலைவர் நெல்சன், மார்க்சிஸ் கம்யூ., மூணாறு பகுதி செயலாளர் விஜயன் மற்றும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.அதன்பிறகு கடைகளை அகற்றும் பணி நடந்தது.கலெக்டர் உத்தரவுபடி இரண்டு நாட்களில் ரோட்டோர கடைகள் அனைத்தும் அகற்றப்படும் என ஊராட்சி செயலர் உதயகுமார் தெரிவித்தார்.கடைகளை அகற்றியபோது எதிர்ப்பு, மறியல், கைது செய்ததால் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறு பகுதியில் நான்கு மணி நேரம் பதட்டமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ