உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கம்பம் : கம்பத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு சமீபத்தில் வக்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று மதியம் கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேசன் அருகில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வரவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜெயினுலாப்தீன் தலைமை வகித்தார். பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அதற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் வக்பு சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ