உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மறியல்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி மறியல்

தேனி: தேனி பங்களாமேட்டில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளான கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், எய்ட்ஸ், காசநோய் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்கள், கொசு ஒழிப்பு, சுகாதாரப்பணியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பணிநிரந்தம், பணிபாதுகாப்பு கோரி ரோடு மறியல் போராட்டம் நடந்தது.சங்க மாவட்ட தலைவர் உடையாளி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சென்னமராஜ், பிற சங்க நிர்வாகிகள் முகமது ஆசிக், ஈஸ்வரன், தங்கமீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோடு மறியலில் ஈடுபட்ட 74 பெண்கள் உட்பட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி