மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
01-Oct-2025
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் இலவச வீடு, வீட்டு மனைபட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் நிர்வாகி அண்ணாமலை, விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில பொருளாளர் பழனிசாமி, மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், சங்கரசுப்பு, பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பொதுமக்கள் சிலர் மட்டும் அளிக்க செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அனைவரும் போலீசார் தடையை மீறி மனு அளிக்க சென்றனர். கலெக்டர், அதிகாரிகள் மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு சென்றிருந்தார். இதனால் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு திரும்பினர்.
01-Oct-2025