போடியில் ஆர்ப்பாட்டம்
போடி : பிரமலைக்கள்ளர் மாணவர் விடுதிகளை அரசு சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றுவதை கண்டித்து போடியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொருளாளர் குருநாதன் தலைமை வகித்தார். போடி நகர தலைவர் காண்டீபன், பொருளாளர் சரவணநிதி உட்பட நிர்வாகிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.