உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி முன் காத்திருப்பு போராட்டம்

தேனி நகராட்சி முன் காத்திருப்பு போராட்டம்

தேனி: தேனி நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், துாய்மை பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி நகராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் முத்துக்குமார், பெத்தலீஸ்வரன் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், தாலுகா செயலாளர் தர்மர், நிர்வாகிகள் நாகராஜ், பாஸ்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கமிஷனர் ஏகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை