உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரசவத்திற்கு பின் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்

பிரசவத்திற்கு பின் பெண் இறப்பு உடலை வாங்க மறுத்து மறியல்

ஆண்டிபட்டி: தேனி அருகே பூதிப்புரம் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி 23, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின் உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால் இறந்ததாக உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.வாழையாத்துப்பட்டி கார்த்திக் மனைவி ஜெயலட்சுமி ஜூலை 9ல் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜெயலட்சுமிக்கு தொடர் ரத்தப்போக்கால் மயக்கம் அடைந்தார். பின் கர்ப்பப்பையை அகற்றினர். அதன் பின்பும் ரத்தப்போக்கு அதிகரித்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி நேற்று முன்தினம் மாலை மருத்துவக் கல்லூரி முன்பு உறவினர்கள் ரோடு மறியல் செய்தனர். தொடர் சிகிச்சை அளித்து காப்பாற்றுவதாக டாக்டர்கள் உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு ஜெயலட்சுமி இறந்தார்.முறையான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மீண்டும் நேற்று காலை ரோடு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமையிலான போலீசார் மறியல் செய்தவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். உடலை வாங்க மறுத்து கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின் மாலையில் உடலை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை