மேலும் செய்திகள்
சுகாதார துறையினருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
31-Dec-2024
தேனி : தேனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கூட்டரங்கில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலில் நீதிமன்ற பணியாளர்களுக்கான தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் அழகேசன், கண்காணிப்பாளர்கள் முத்துநாராயணன், மதிவாணன் முன்னிலை வகித்தனர். முதன்மை மாவட்ட நீதிபதி பரிந்துரைத்த ஓட்டுனர் உரிமம் பெற்ற 17 நீதிமன்ற பணியாளர்களுக்கு, வாகனங்களை இயக்கும் திறன், வாகன பராமரிப்பு, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு தன்னார்வலரும், அலுவலக டிரைவருமான சத்தியசிவன் பயிற்சி வழங்கினார்.
31-Dec-2024