உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சிற்றுண்டி வழங்கல்

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத சிற்றுண்டி வழங்கல்

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு புரத சிற்றுண்டிகள் வழங்கும் பணியை கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா துவக்கி வைத்தார். நோயாளிகளுக்கு மஞ்சள் கரு நீக்கப்பட்ட இரு முட்டைகள், பால், சுண்டல், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த், ஆர்.எம்.ஓ., சிவகுமரன், ஏ.ஆர்.எம்.ஓ.,க்கள் ஈஸ்வரன், மணிமொழி, சிறுநீரக பிரிவு மருத்துவர் காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.டாக்டர்கள் கூறுகையில், ''தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 30 நோயாளிகள் வரை டயாலிசிஸ் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் புரதம் அதிகம் உள்ள உணவு உட்கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு புரதசத்து அதிகம் உள்ள சிற்றுண்டி வழங்க அரசு அறிவிப்பின்படி சிற்றுண்டி வழங்கும் பணி துவங்கி உள்ளோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை