உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சிகளில் வரி வசூல் கெடுபிடி பொதுமக்கள் முகம் சுளிப்பு

நகராட்சிகளில் வரி வசூல் கெடுபிடி பொதுமக்கள் முகம் சுளிப்பு

கம்பம்: நகராட்சிகளில் 2025-2026ம் நிதியாண்டு துவக்கியவுடனேயே வரி வசூலில் பணியாளர்கள் கெடுபிடி காட்டுவதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். வீட்டு வரி, சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி, சேவை வரிகள் உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படுகிறது. நகராட்சிகளில் இந்த வரி வருவாயே பொதுநிதியாக கையாளப்படுகிறது. நகரின் வளர்ச்சி பணிகள் செய்ய இந்த வரி வருவாய் பயன்படுகிறது. 2024- -2025 ம் நிதியாண்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் பொதுமக்கள்,வர்த்தகர்கள் வரி செலுத்தினார்கள். இந்த நிதியாண்டு முடிந்து 2025--2026 ம் நிதியாண்டு துவங்கியுள்ளது. இந்த நிதியாண்டு துவங்கி 4 மாதங்களாகிறது. நிதியாண்டிற்கு பொதுவாக வரி வசூல் நவம்பரில் துவங்கி 2026 மார்ச் வரை நடைபெறும். இது தான் நடைமுறை, ஆனால் தற்போது 2025 - -2026ம் நிதியாண்டிற்கு வரி வசூலை பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே துவக்கி கெடுபிடி செய்கின்றனர். 2026 மார்ச் வரை அவகாசம் இருக்கும் போது இப்போது வந்து ஏன் விரட்டுகிறீர்கள் என கேட்டு , பொதுமக்களும் புலம்புகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், '2024-2025ம் நிதியாண்டிற்கு சில மாதங்களுக்கு முன் தான் செலுத்தினோம். இன்னமும் 9 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே வந்து விரட்டுகின்றனர்,' என்றனர். வரி வசூலிப்பவர்கள் கூறுகையில், '2026 ல் சட்டசபை தேர்தல் பணிகள் துவங்கி விடும்: அப்போது வரி வசூலிக்க முடியாது. எனவே 2025 நவம்பருக்குள் வசூலை முடிக்க உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்றனர். அரசின் இந்த கெடுபிடி நடவடிக்கையால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி