மேலும் செய்திகள்
இனிதாக கழியட்டும் இன்றைய நாள்
20-Jul-2025
தேனி: பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 4:00 மணிக்கு பஜனை, தொடர்ந்து சொற்பொழிவு, இரவு 7:30 மணிக்கு கிருஷ்ணன் சேஷ வாகனத்தில் உலா வருகிறார். நாளை மாலை அல்லிநகரம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் பஜனை, நாரதர் சரித்திர சொற்பொழிவு, இரவு சிம்ம வாகனத்தில் பவனி வருகிறார். ஆக.10 காலை வன போஜனம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை கோபகுடீர குழந்தைகளின் மதுரகீத பஜனை, சத்சங்கம் நிகழ்ச்சி, சொற்பொழிவு, இரவு கருடசேவை புறப்பாடு நடக்கிறது. ஆக.11ல் காலை கோவிந்த பட்டாபிஷேகம், மாலை பகவத்கீதை பாராயணம், சொற்பொழிவு, இரவு கஜ வாகன புறப்பாடு நடக்கிறது. ஆக.12ல் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி, சொற்பொழிவு, அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது. ஆக.13, 14 மாலை பரதநாட்டியம், பஜனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஆக.,15ல் ராதா கல்யாண நிகழ்ச்சி, ருக்மணி கல்யாணம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. ஆக.16ல் கோகுலாஸ்டமியை முன்னிட்டு காலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை நாமகீர்த்தனம் பாடுதல், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்று குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பெற்றோர்கள் அழைத்து வரலாம். அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என, பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மைய நிர்வாகி கிருஷ்ணசைத்தன்யதாஸ் தெரிவித்தார்.
20-Jul-2025