உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆய்வுடன் முடங்கிய ரயில் கடல் விமானம் திட்டங்கள்: செயல்படுத்த எதிர்பார்ப்பு

ஆய்வுடன் முடங்கிய ரயில் கடல் விமானம் திட்டங்கள்: செயல்படுத்த எதிர்பார்ப்பு

மூணாறு: மூணாறில் ஆய்வுகளுடன் முடங்கிய ரயில் சேவை, கடல் விமானம் ஆகிய சுற்றுலா திட்டங்கள் துவங்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூணாறில் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேயிலை தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்கள் ரயில் மூலம் சரக்குகளை கையாண்டனர். 1924ல் ஜூலையில் கனமழையால் ரயில் பாதைகள் சீரமைக்க முடியாதவாறு சேதமடைந்தன. இதனால் ரயில் சேவை கைவிடப்பட்டது. ஆய்வு: மூணாறில் தெற்கு ரயில்வே, இடுக்கி மாவட்ட சுற்றுலா துறை, தனியார் தேயிலை கம்பெனி இணைந்து சுற்றுலா ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஆய்வுகள் நடந்தன. மேற்கு வங்கம் டார்ஜிலிங், ஹிமாலயன் இடையே இயக்கப்படும் 'டாய்ஸ்' ரயில் போன்று மூணாறில் இருந்து மாட்டுபட்டி வரை 5 கி.மீ., துாரத்திற்கு இயக்க 2018ல் ஆய்வு செய்யப்பட்டது. ரயில் நிலைய இட தேர்வு வரை நகர்ந்த திட்டம் முடங்கியது. மத்திய அரசின் 'உதான்' திட்டத்தில் கொச்சியில் இருந்து மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணைக்கு கடல் விமானம் இயக்க 2024 நவ., 11ல் சோதனை ஓட்டம் நடந்தது. அந்த திட்டமும் சோதனை ஓட்டத்துடன் முடங்கியது. இந்த இரு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !