உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை அளவு, அணை நிலவரம் தகவல் செயலியில் பெறலாம் புகார்களையும் தெரிவிக்கலாம்

மழை அளவு, அணை நிலவரம் தகவல் செயலியில் பெறலாம் புகார்களையும் தெரிவிக்கலாம்

தேனி: வடகிழக்கு பருவமழை காலத்தில் வானிலை தகவல்கள், பேரிடர் கால தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள தமிழக அரசு TN-Alert என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இச் செயலி பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் செயலியில் இருப்பிடத்தை தேர்வு செய்து பயன்படுத்துவது அவசியமாகும். அடுத்த நான்கு நாட்களுக்கான மழை, வெப்பநிலை முன்னறிவிப்புகள், வெள்ளம் பாதிக்கும் பகுதிகள், பேரிடர் பாதிப்பின் போது எவ்வாறு செயல்பட வேண்டும். மாநிலம் முழுவதும் பதிவாகும் மழையளவு, அணைகளின் நீர்மட்டம் இடம் பெற்றுள்ளது.இதில் வெள்ள பாதிப்பு ன புகார்கள் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி அவசர கால தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 04546 250101, 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை