உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடை வியாபாரிகள் போராட்டம் முடிவு

ரேஷன் கடை வியாபாரிகள் போராட்டம் முடிவு

மூணாறு : கேரளாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் வியாபாரிகள் நடத்திய போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது.கேரளாவில் லைசென்ஸ் அடிப்படையில் வழங்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப் படுகிறது. ரேஷன் கடைகள் நடத்தும் வியாபாரிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடைகளை அடைத்து காலவரையற்ற போராட்டம் அறிவித்து நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேச்சு வார்த்தை: கேரள உணவுதுறை அமைச்சர் அனில், ரேஷன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஊதிய உயர்வை உயர்த்துவது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையை வரும் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக மார்ச்சில் ரேஷன் கடை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்படும். வியாபாரிகளுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் பிப்.15 க்கு முன்பாக வழங்கப்படும். வியாபாரிகளின் நல நிதியை வலுப்படுத்துவதற்கு வெள்ளை, நீலம் ஆகிய நிறம் கொண்ட கார்டு உரிமையாளர்களிடம் இருந்து மாதம் தோறும் 'செஸ்' வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ரேஷன் வியாபாரிகள் நடத்திய போராட்டம் ஒரே நாளில் முடிவுக்கு வந்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு, நேற்று ரேஷன் கடைகளை திறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ