உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம்,உத்தமபாளையத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் தனித் துறை, புதிய ஊதியம், எடையாளர் நியமனம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகம் முன் நடந்தது. மாநில பொருளாளர் பொன் அமைதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர் பாண்டி , காமாட்சி முருகேசன், போராட்டக்குழு தலைவர் நாகேந்திரன், மகளிர் அணி ஆர்த்தி, மாவட்ட தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் முத்துராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை