உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ரேஷன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி: ரேஷன்கடை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் 215க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படவில்லை. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதித்தது.அனைத்து ரேஷன்கடைகளிலும் எடையாளர் நியமிக்க வேண்டும். நுகர்பொருள் வாணிப கழக தராசுகளுடன், ரேஷன் கடை விற்பனை முனைய கருவிகளை இணைக்க வேண்டும், சேதார கழிவு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன் நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் பொன்அமைதி தலைமை வகித்தார். இந்த போராட்டத்தால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது. ரேஷன்கடை பணியாளர்கள் 194 பேர் தற்செயல் விடுப்பு எடுத்திருந்தனர். 21 பேர் தகவல் தெரிவித்து விடுப்பு எடுத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள 517 ரேஷன் கடைகளில் 215க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !