மேலும் செய்திகள்
ஆறு கடைகளை உடைத்து திருட்டு
20-Nov-2024
டிராபிக் போலீஸ் சோதனை; 5 ஆட்டோக்கள் பறிமுதல்
14-Nov-2024
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் வட்டார போக்குவரத்து துறை மதுரை இணை ஆணையர் சத்ய நாராயணன், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் சுந்தர்ராமன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை வாகன சோதனை செய்தனர். கொச்சியிலிருந்து மதுரை சென்ற டூரிஸ்ட் பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாலை வரி ரூ,28 ஆயிரம் செலுத்த உத்தரவிடப்பட்டது.பின்னர் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர். டூரிஸ்ட் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமே அதிகமாக விபத்துக்களில் சிக்குவதாகவும் இணை ஆணையர் தெரிவித்தார். எனவே சொந்த வாகனங்களில் செல்பவர்களை நிறுத்தி மெதுவாக செல்ல வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
20-Nov-2024
14-Nov-2024