உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம் : கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதும், சில நாட்களுக்கு பின் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது வாடிக்கையாக நடக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு கம்பம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புக்களை அகற்றியது. வழக்கம் போல கடைக்காரர்களும் மீண்டும் ஆக்கிரமித்தனர். கலெக்டரின் அறிவுறுத்தலை தொடர்ந்து தீபாவளிக்கு முன்பு ஆக்கிரமிப்புக்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை தயாரானது. தீபாவளியை காரணம் காட்டி கால அவகாசம் கேட்டனர். அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர்.தீபாவளிக்கு பின் நவ . 12 ல் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புக்களை அகற்றினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே கடைக்காரர்கள் விளம்பர போர்டுகள் தகரங்களை அகற்றி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !