உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.50 கோடியில் ரோடு பாலங்கள் சீரமைப்பு பணி

ரூ.50 கோடியில் ரோடு பாலங்கள் சீரமைப்பு பணி

தேனி: தேனி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.50 கோடியில் ரோடு சீரமைத்தல். விரிவாக்கம், பாலங்கள் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள், இதர ரோடுகள் என மொத்தம் 994.85 கி.மீ. ரோடுகள் பராமரிக்கப்படுகின்றன இந்த ரோடுகள் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடி, உத்தமபாளையம் சப்டிஷன்கள் வாரியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.மாவட்டத்தில் இந்தாண்டு மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல், விரிவாக்கம், சிறு பாலங்களை சீரமைத்தல், புதுப்பித்தல் பணிக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 27 பணிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சப்டிவிஷனுக்கு தலா ரூ. 10 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை